இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு மத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த நிவாரணப் பொதியை குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்குமாறு பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுநிரூபத்தின் ஊடாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் மற்றும் சமூர்த்தி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலணி இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.