May 24, 2025 21:45:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மங்கள சமரவீர எப்போதும் அமைதிக்காக உழைத்தவர்”: ஹெரிக் சொல்ஹெம்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எப்போதும் அமைதிக்காக உழைத்தவர் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவின் மறைவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஹெரிக் சொல்ஹெம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”நான் மிகவும் வருத்தமடைகின்றேன். மங்கள எனது பழைய நண்பன், எப்போதும் அமைதிக்காக உழைத்தவர். தலைமுறையின் சிறந்த மற்றும் ஒழுக்கமான இலங்கை அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்துள்ளோம்” என்று ஹெரிக் சொல்ஹெம் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.