January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஊரடங்கு சட்டம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பொருந்தாது”: பிரசன்ன ரணதுங்க

Photo: Facebook/srilankaBIA

நாடு முடக்கப்பட்டிருந்தாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு எந்தத் தடையும் கிடையாது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலாப் பயணிகள் இலங்கை வர முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கவச முறையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே தங்களுக்கான ஹோட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு பொருந்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.