இலங்கையில் கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு அதனை உறுதிப்படுத்தும் வகையில் டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்ட பின்னர் இந்த அட்டை விநியோகிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் இந்த டிஜிட்டல் அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது வரையில் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தை கடந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தின் முதல் வாரமளவில் 75 வீதத்தை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.