July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விமானப் படைத் தளபதிக்கு கொவிட் தொற்று உறுதி!

இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரணவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இதேவேளை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு நேற்று கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.

அத்துடன் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.