தனமல்வில பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) இரவு 9.20 மணியளவில் 2.5 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து ஹம்பாந்தோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளில் 2 ரிச்டர் அளவிலான சிறு நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் 5.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் நண்பகல் 12.30 அளவில் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.