June 15, 2025 0:56:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘3 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக நான்கு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன’

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்காக நான்கு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல ஆலோசகர் வைத்தியர் நளின் கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, மொடர்னா, ஃபைசர், சினோபார்ம் மற்றும் சினோவக் தடுப்பூசிகள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியை வழங்கும் திகதி தொடர்பில் இலங்கைக்கு கிடைக்கும் தடுப்பூசிகளின் அளவுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என்று வைத்தியர் கித்துல்வத்த மேலும் கூறினார்.

மேலும், தடுப்பூசி போடும் திட்டத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.