தற்போதுள்ள நிலையில் கடந்த வாரத்தை விடவும் இந்த வாரத்தில் 75 வீதத்தால் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ளதுடன், 40 வீதத்தில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே 75 வீத மக்களுக்கேனும் கொவிட் வைரஸ் தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றினால் மட்டுமே அடுத்த கட்டத்தில் நாட்டை திறப்பது குறித்து சிந்திக்க முடியும் என இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது 25 வீதமானவர்கள் கொவிட் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.55 வீதமானவர்களுக்கு ஏதேனும் ஒரு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.எனினும் நாட்டின் தற்போதுள்ள அச்சுறுத்தல் நிலையில் இந்த பெறுபேறுகள் போதுமானதல்ல.
75 வீத மக்களுக்கு கொவிட் வைரஸ் தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றினால் மட்டுமே அடுத்த கட்டத்தில் நாட்டை திறப்பது குறித்து சிந்திக்க முடியும் என்றொரு நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.