சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் உடல் நிலை சீராக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் அவருக்கு பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
முன்னதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொலிஸ் ஊடக பேச்சாளராகவும் கடமையாற்றி வந்தார்.