January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் கைது தொடர்பில் ஊடக அமைப்புகள் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

file photo

இந்திய தூதரகத்துக்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடைபெற வேண்டும் என்று ஊடக அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து, இதனைக் கேட்டுக்கொண்டுள்ளன.

லங்கா ஈ நிவுஸ் இணையதளத்தின் ஊடகவியலாளராக கடமை புரிந்த கீர்த்தி ரத்நாயக அண்மையில் கைது செய்யப்பட்டு, 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளரை பரிந்துரைக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைய விசாரணைக்கு உட்படுத்துமாறும், அவரது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும் ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக அவர் கடமை புரியும் செய்தி இணையதளத்தின் தகவல்கள் மற்றும் செய்தி மூலாதாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதை ஊடக அமைப்புகள் கண்டித்துள்ளன.

ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக சம்பவம் தொடர்பான அனைத்து உண்மை தகவல்களையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துமாறும் பொலிஸ்மா அதிபரிடம் ஊடக அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.