May 25, 2025 21:24:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ‘கொவிட் நிதியம்’ ஆரம்பித்து வைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொவிட் நிதியம் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.

அதற்கமைய, குறித்த நிதியத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காசோலை மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் காசோலை என்பன கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ணவிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் வங்கிக் கணக்கும் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் வங்கி சுதுவெல்ல கிளையிலேயே 143100150009171 எனும் கணக்கு இலக்கத்தில் அந்தக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கிளை, சங்க உறுப்பினர்கள் இந்த நிதியத்துக்கு முடிந்தவரை பங்களிப்பு செய்யுமாறு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.