
நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் முஸ்லீம் மத குருமார்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் பிரதேச செயலக மட்டத்தில் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மதகுருமார்கள் அனைவரும் அந்தந்த கிராம சேவகரை தொடர்பு கொள்ளுமாறு செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி தொடர்பில் மேலதிக விவரங்களை பெற்றுக்கொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பௌத்த துறவிகள் – பௌத்த விவகார ஒருங்கிணைப்பாளர், தேரர்கள் அல்லது பிரதேச செயலக அதிகாரிகள் (076-5481781, 077-8514039)
இந்து மதகுருமார்கள் – இந்து கலாசார அலுவல்கள் பணிப்பாளர் (071-4471128)
கத்தோலிக்க மதகுருமார்கள் – கத்தோலிக்க கலாசார விவகாரங்களின் பணிப்பாளர் (071-4061132)
முஸ்லிம் மதகுருமார்கள் – முஸ்லிம் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் (076-1395362)