May 24, 2025 1:26:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை தொடர்ந்தும் உயர்வு

Stock Exchange Common Image

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி, இன்றைய தினத்திலும் குறிப்பிடத்தக்க வீதத்தால் உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினத்தில் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி குறிப்பிடத்தக்க புள்ளிகளால் உயர்வடைந்திருந்த நிலையில், அதேபோன்று இன்றைய தினமும் விலைச் சுட்டி உயர்வை பதிவு செய்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதன்படி அனைத்துப் பங்குகளின் (ASPI) விலைச் சுட்டி நேற்றைய தினத்தை விடவும் இன்று 188.30 புள்ளிகளால் உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினத்தில், 8,479.65 புள்ளிகளாக காணப்பட்ட அனைத்து பங்குகளின் விலைக் சுட்டி இன்றைய தினத்தின் பங்குப் பரிவர்த்தனை முடிவில் 8,667.95 ஆக உயர்வடைந்திருந்தது. இது 2.22 வீத உயர்வாகும் .

இதேவேளை S&P SL20 விலைச் சுட்டியிலும் அளவு உயர்வு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் S&P SL20 விலைச் சுட்டி 3148.16 ஆக காணப்பட்ட நிலையில் அது இன்றைய பரிவர்த்தனை முடிவில் 3,176.40 ஆக உயர்வடைந்துள்ளது.