July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் டொலர் கையிருப்பைப் பலப்படுத்த சர்வதேச நாணய நிதியம் உதவி

இலங்கையின் டொலர் கையிருப்பைப் பலப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவி செய்ய முன்வந்துள்ளது.

உலக நாடுகள் கொரோனாவால் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் அதன் உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு நாணய கையிருப்பைப் பலப்படுத்துவதற்கு 650 பில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டில் இலங்கைக்கு 578 முதல் 816 மில்லியன் டொலர் வரையான நாணய கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

உறுப்பு நாடுகளுக்கு 650 பில்லியன் டொலர் ஒதுக்கியதன் ஊடாக நாடுகளின் நிதி நெருக்கடிகளைச் சீர்செய்ய முடியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிதி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் நாணய நிதியத்தின் நிதி முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதளவில் இலங்கையின் டொலர் கையிருப்பு 2.8 பில்லியன் வரை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.