January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 2 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசி இறக்குமதி!

இலங்கைக்கு இதுவரை 208 இலட்சத்திற்கும் அதிகமான கொவிட் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மருந்து, விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இன்று (24) காலை ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது. அதன்படி, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சினோபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1.57 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றவர்களின் எண்ணிக்கை நேற்றுவரை ஒரு கோடி 21 இலட்சத்து 29,492 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நேற்றுவரை வெளியான தகவல்களின் படி, கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 58 இலட்சத்து 7496 ஆக பதிவாகியுள்ளது.

இதன்படி நாட்டின் மொத்த சனத்தொகையில், 26 வீதமானவர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.