
கொரோனா மரணங்கள் தொடர்பான போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை இலங்கையில் நிகழ்ந்த மரணங்கள் என போலியான தகவல்களை அவர் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில மருத்துவமனையில் நோயாளர் சிகிச்சை அறையில் கொரோனா மரணங்களினால் உயிரிழந்தவர்களின் சரீரங்கள் ஆங்காங்கே காணப்படுவதாக அவர் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கைதானவர் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.