அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சனை தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் சில நிறுவனங்களுக்கு சென்று ஆராயவுள்ளதால் அந்த கலந்துரையாடலை அடுத்த வார அமைச்சரவை கூட்டத்திலும் தொடர தீர்மானித்ததாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
இதன்படி அது தொடர்பான தீர்மானம் அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.