November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரச, தனியார் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்தத் தீர்மானமும் இல்லை”

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு அரசாங்கத்தினால் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெருமன இதனை கூறியுள்ளார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை கொவிட் தடுப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கும் நிலையில், அதேபோன்று அரச மற்றும் தனியார் துறையினரின் உழியர்களின் சம்பளத்திலும் ஒரு பகுதியை அந்த நிதியத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்படுமா என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகையில், அரச, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்தவித தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை. அது தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்று தெரிவித்தார்.

இதேவேளை அவ்வாறு பலவந்தமாக அந்த நிதியத்திற்கு நிதி பெற்றுக்கொள்ளவதற்கான தேவையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.