July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் இருந்து மேலும் ஒருதொகை ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கை வந்தன

சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒருதொகை ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

இதன்படி ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள், இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட சரக்கு விமானம் ஒன்றில் சீனாவின் பீஜிங் தலைநகரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வாரத்தில் மேலும் இரண்டு மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து கொண்டு வரப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.