கொவிட் -19 வைரஸ் தொற்றுப்பரவல் உச்ச கட்டத்தில் நாடு உள்ள போதிலும் செப்டெம்பர் முதல் வாரத்தில் கொவிட் தொற்றுப்பரவல் குறைவடையும் சாத்தியப்பாடுகள் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
முடக்கப்பட்டுள்ள இரண்டு வாரங்களில் மக்களின் முழுமையான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது நாட்டில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.நாளாந்த நான்காயிரத்திற்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் இறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஆகவேஆரம்பத்தில் பலவீனமான தீர்மானங்கள் எடுத்ததன் விளைவே இதுவாகும்.
எனினும் இப்போதாவது நாடு முடக்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்கள் கடினமான கட்டுப்பாட்டுகள் பின்பற்றப்பட்டால் செப்டெம்பர் முதல்வாரத்தில் வைரஸ் பரவலை வெகுவாக குறைக்க முடியும்.அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.
இப்போது அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும்,மரணங்கள்அதிகரிக்கவும் கடந்த கால வைரஸ் பரவல் நிலைமைகளே காரணமாகும்.ஆகவே இரண்டு வாரங்களில் நிலைமைகள் மாறும் எனக் கூறியுள்ள அவர், மக்கள் முழுமையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சமூக ஒன்றுகூடல், அனாவசிய செயற்பாடுகளை தவிர்த்து நிலைமைகளை விளங்கிக் கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.