January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு பெற்றுக்கொள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்க முன்வந்துள்ளனர்.