
மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணத்தின் 5 ஆவது சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், தீ விபத்துக்கு உள்ளாகி ஹிஷாலினி உயிரிழந்தார்.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவத்தின் 5 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளார்.
சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்டவர்களை செம்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.