January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனையில் உயர்வு!

Photo: Facebook/ Colombo Stock Exchange

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி, இன்றைய தினத்தில் பெருமளவான புள்ளிகளால் உயர்வடைந்துள்ளது.

இதன்படி அனைத்துப் பங்குகளின் (ASPI) விலைச் சுட்டி முந்தைய தினத்தை விடவும் இன்று 239.59 புள்ளிகளால் உயர்வடைந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

முந்தைய தினத்தில், 8240.06 புள்ளிகளாக காணப்பட்ட அனைத்து பங்குகளின் விலைக் சுட்டி இன்றைய தினத்தின் பங்குப் பரிவர்த்தனை முடிவில் 8,479.65 ஆக உயர்வடைந்திருந்தது.

இது 2.91 வீத உயர்வாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை S&P SL20 விலைச் சுட்டியிலும் குறிப்பிடத்த அளவு உயர்வு ஏற்பட்டுள்ளது.

முந்தைய நாளில் S&P SL20 விலைச் சுட்டி 3048.64 ஆக காணப்பட்ட நிலையில் அது இன்றைய பரிவர்த்தனை முடிவில் 3148.16 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இன்றைய பங்குளின் மொத்த புரள்வின் பெறுமதி 10.8 பில்லியன் ரூபாவாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பணிகள் வழமைப் போன்று இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கிழமை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையில் பங்குச் சந்தை பங்குப் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.