
இந்தியாவின் மருந்து உற்பத்தி ஆலைகளை இலங்கையில் அமைப்பது குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சருடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியா நல்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பௌத்த கலாசாரத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் மத சுற்றுலாவை ஊக்குவிப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கும் வெளியுறவு அமைச்சர் பாராட்டியுள்ளார்.
இந்த சந்திப்பில் மீன்வளம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், இரு தரப்பினரும் பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள, நடைமுறைத் தீர்வைத் தேடுவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளனர்.