
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரவு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு, புனித தந்தத்தின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியை தியவடன நிலமே நிலங்க தேல பண்டார வரவேற்றுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இறுதி ரந்தோலி பெரஹரா வீதி உலா வந்ததை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து பார்வையிட்டனர்.