கொரோனா தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்காக மருத்துவமனைகளில் தனியான சிகிச்சை அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் 3,800 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதுடன், அவர்களில் 850 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், சில கர்ப்பிணித் தாய்மார்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.