
இலங்கையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்பு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா நோயாளர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு தமது இந்த மாத சம்பளத்தை அன்பளிப்பு செய்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது மாத சம்பளத்தையும் கொரோனா தடுப்பு மருத்துவ பணிகளுக்கு செலவிட தீர்மானித்ததாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோய் முடிவடையும் வரையில் தனது சம்பளத்தை ஹம்பாந்தோட்டை மக்களுக்கு செலவிடவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேநேரம், அமைச்சர்களான பந்துள குணவர்தன, எஸ்.எம். சந்திரசேன மற்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி ஆகியோரும் இந்த மாத சம்பளத்தை கொரோனா கட்டுப்பாட்டு நிதியத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.