January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டி எசல பெரஹராவில் யானைகள் குழப்பமடைந்ததால் பரபரப்பு!

கண்டி எசல பெரஹராவின் இறுதி ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், இதன்போது யானைகள் இரண்டு குழப்பமடைந்ததால் அந்த பெரஹராவில் கலந்துகொண்டவர்களிடையே பரபரப்பு நிலைமை ஏற்பட்டது.

கண்டி எசல பெரஹெரா கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானதுடன், அதன் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் ஊர்வலத்தில் பங்கேற்ற கதிர்காம தேவாலயத்தின் இரண்டு யானைகள் குழப்பமடைந்து சுற்றியுள்ளன.

இதனால் ஊர்வலத்தில் பங்குகொண்ட நடன கலைஞர்கள் பயத்தில் தப்பி ஓடுகின்ற காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

எனினும், குறித்த சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், குழப்பமடைந்த யானைகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, இன்று இடம்பெறும் கண்டி எசல பெரஹராவின் தீர்தோற்சவத்தையடுத்து பெரஹெரா நிறைவு பெறும் என்று ஸ்ரீ தலதா மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.