July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர்- அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸை அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது குறித்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து போன்ற சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் ஒத்துழைப்புகளுக்கு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தனியார் துறையினரின் முதலீடுகளை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வரவேற்றுள்ளார்.