
இந்தியாவில் இருந்து 40 டொன் ஒட்சிஜனை ஏற்றிய இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
சென்னையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி புறப்பட்ட இந்தக் கப்பல் நேற்று இரவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒட்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதனால் தேவையான ஒட்சிஜனை இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக நேற்று அதிகாலை விஷாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான சக்தி என்ற கப்பலில் 100 டொன் ஒட்சிஜன் கொண்டு வரப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு சென்னையில் இருந்து இலங்கையின் சக்தி கப்பலில் மேலும் 40 டொன் ஒட்சிஜனுடன் கொழும்பு வந்துள்ளது.