
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பணிகள் வழமைப் போன்று இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிழமை நாட்களில் 11 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையில் பங்குச் சந்தை பங்குப் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு கொழும்பு பங்குச் சந்தை இதனை குறிப்பிட்டுள்ளது.