கொவிட் தடுப்பூசிகளின் பெயர்களை தெரிவு செய்யாது, கிடைக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியையும் ஏற்றிக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேலா குணவர்தன, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு சென்று கிடைக்கும் எந்த ஒரு தடுப்பூசியையும் விரைவில் ஏற்றிக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 70 – 80 வீதமானவர்கள் 2 தடுப்பூசி டோஸ்களையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.