July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கையில் இணையவழி பரிவர்த்தனைகளுக்கு விரைவில் வரி விலக்கு”: நாமல் ராஜபக்‌ஷ

நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைவதால், இணையவழி நிதி சார்ந்த பரிவர்த்தனைகளின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இணையவழி பரிவர்த்தனைகளுக்கு வரிகளை விதிக்காதிருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் நாமல்  ராஜபக்‌ஷ உறுதியளித்தார்.

இணையவழி பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று பரப்படும் வதந்திகளை நிராகரித்த அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, இணையவழி பரிவர்த்தனைகள், இலத்திரனியல் வணிகம் அல்லது டிஜிட்டல் வணிகங்களுக்கு அரசாங்கம் விரைவில் வரி விதிக்காது என்று கூறியுள்ளார்.

எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் இணையவழி வியாபாரங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரனியல் வணிக தளங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு வழி வகுக்கும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது என்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இதனிடையே, அண்மையில் நிதியமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவுடனான கலந்துரையாடலின் போது உலகளவில் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸுக்குப் பிறகு மாற்றமடைந்துள்ளதாகவும், அதிகளவில் வணிக நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்ந்ததாக அவர் கூறியுள்ளார்.