February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளது’

நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கலாநிதி நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

இன்று (22) காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஔிபரப்பப்பட்ட விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட அவர், நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் இந்த அனைத்து பிறழ்வுகளுக்கும் திறம்பட பதிலளிப்பதாக கூறினார்.

கடுமையான பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள இந்த காலத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை தெரிவு செய்யாமல் அருகிலுள்ள மத்திய நிலையங்களில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.