May 14, 2025 9:58:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெட்ரோலிய தொழிற்சங்க உறுப்பினர் ஆனந்த பாலித்த பிணையில் விடுவிப்பு

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பொதுச் சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளரான ஆனந்த பாலித்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த ஆனந்த பாலித்த, நாட்டின் எரிபொருள் களஞ்சியத்தில் குறைந்தளவான எரிபொருளே கையிருப்பில் இருப்பதாகவும் இதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாகவும் கூறியிருந்தார்.

இவர் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் கோரி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நேற்று மாலை ஆனந்த பாலிதவை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.