
திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் ஒரு மில்லியன் ரூபா பெருமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குச்சவெளி – ஜயாநகர் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கஞ்சா மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, 3 கிலோ 548 கிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சோதனையின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பொருட்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் குச்சவெளி பிரதேசத்தில் வசிக்கும் 41 தொடக்கம் 49 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களுடன் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.