May 28, 2025 22:27:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொற்றால் கொழும்பு லேடி ரிஜ்வேயில் 12 சிறுவர்கள் மரணம்!

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் நாளாந்தம் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் சிறுவர்களிடையே அது அதிகளவில் பரவக் கூடும் எனவும், இதனால் வீடுகளில் சிறுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சிறுவர் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.