
இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி 23 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் எரிவாயு களஞ்சிய பகுதிக்கு நேற்று கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் அங்கு நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இதன்போது சந்தைக்கு தேவையான அளவு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய திங்கட்கிழமை முதல்
அதற்கான தட்டுப்பாடு இல்லாமல் போகும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது.