February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்; கண்ணுக்கு தெரியாத ஒரு பக்கம் இருக்கிறது என்கிறார் கர்தினால்

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட கண்ணுக்கு தெரியாத ஒரு பக்கம் இருப்பதாக தெரிகிறது என்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் உண்மையை யாராவது அடக்க முயன்றால், அவர்களை மங்கச் செய்து, அவர்களின் சக்தியைக் குறைத்து, மனசாட்சிக்கு ஆதரவாக நிற்கும் சக்தியை கொடுக்கும்படி கடவுளிடம் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலின் விவரங்களை மறைத்து கைகளை கழுவ முயன்றாலும் கடவுள் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்றும் பேராயர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 28 மாதங்கள் ஆகியுள்ள நிலையில்,அதற்கு காரணமானவர்கள் யார் என்று வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு தழுவிய எதிர்ப்பு சனிக்கிழமை (21)இடம்பெற்றபோது பேராயர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.