May 29, 2025 11:52:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொற்றுக்கு பயந்து மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டாம்; வைத்திய நிபுணர்கள் ஆலோசனை

கொவிட் தொற்றுக்கு பயந்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் சுகயீனம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டாம் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் வைத்திய நிபுணர் ஹர்ஷ சதீஷ்சந்திர அறிவுறுத்தியுள்ளார்.

மாரடைப்பு போன்ற தீவிர நோய் ஏற்படும்போது, மருத்துவமனைக்கு விரைந்து செல்லாவிட்டால் துரதிருஷ்டவசமாக உயிரிழக்க நேரிடும் என்று வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவமனைகளில் கொவிட் சிகிச்சை பிரிவுகள் தனியாக இயங்குவதால் அது தொடர்பில் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் வைத்திய நிபுணர் ஹர்ஷ சதீஷ்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே நீண்ட நாள் நோய் நிலைமையை உடையவர்கள் மற்றும் திடீர் நோய் நிலைமைக்கு உள்ளாகுபவர்கள் வைத்தியசாலைக்கு செல்ல தயங்க வேண்டாம் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் வைத்திய நிபுணர் ஹர்ஷ சதீஷ்சந்திர கூறியுள்ளார்.