July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கை வெளியிட்ட ஆனந்த பாலித்த கைது!

இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து சமீபத்தில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பில் விசாரிப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய ஆனந்த பாலித்த, நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள பெற்றோல் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என அவர் கூறியிருந்தார்.

இதனிடையே, நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை எனவும் அவ்வாறு நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் தாம் அது தொடர்பில் பொது மக்களுக்கு அறியத்தருவதாகவும்  எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.