November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

60 வகையான மருந்துகளுக்கான நிர்ணய விலையை அறிவிக்கும் வர்த்தமானி வெளியானது

இலங்கையில் 60 வகையான மருந்துகளுக்கான நிர்ணய விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, சுகாதார அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு மருத்தினதும் விற்பனை நாமத்தின் கீழ் செயற்திறனுக்கு அமைவாக அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் சட்டத்திற்கு ஏற்ப நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது.