இலங்கை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை உப குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி, அதிபர் மற்றம் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒரு மாதத்துக்கு அதிகமான காலமாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த பிரச்சினையை ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நிதி அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு பல்வேறு தீர்வுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவை உப குழு உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.