
இலங்கையின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்கும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 10 மணி முதல் 2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் அவசரமான, உண்மையான தேவைகளை உடையவர்களுக்கு சேவைகளை கட்டுப்பாடுகளுடன் வழங்க வெளியுறவு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டடத்தில் அமைந்துள்ள கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு முடக்கநிலை காலப்பகுதியில் மூடப்பட்டிருப்பதுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்பு மற்றும் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள் தொடர்பான கொன்சியூலர் சேவைகளை மட்டும் கட்டாயமான முன் பதிவு அடிப்படையில் வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்பு விடயங்கள் தொடர்பான சேவைகளை பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் வழங்கவுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முன்பதிவுகளின் ஊடாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள கொன்சியூலர் அலுவல்கள் பிரிவை பின்வரும் வகையில் தொடர்பு கொள்ளுமாறும் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.