January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீற வேண்டாம்’: இராணுவத் தளபதி எச்சரிக்கை

இலங்கையில் நேற்று இரவு முதல் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீற வேண்டாம் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் 10 நாட்களுக்கு நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படியும், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், சுகாதாரத் துறையினர் பல்வேறு சிரமங்களுக்கும் முகங்கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.