
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி இன்று நாடு முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
21 ஆம் திகதியாகிய இன்று ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை வலியுறுத்தும் விதமாக வீடுகளிலும் வியாபார நிலையம், வணக்கஸ்தலங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றுமாறு கத்தோலிக்க திருச்சபை கேட்டுக்கொண்டிருந்தது.
இந்த கறுப்புக் கொடி போராட்டம் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்று கத்தோலிக்க திருச்சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரும் விதமாக பொதுமக்கள் வீடுகளிலும் வியாபார நிலையங்களிலும் வணக்கஸ்தலங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.