இலங்கையிலிருந்து ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியின் மதிப்பு ஆண்டுக்கு 28 வீதம் அதிகரித்து 2.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையூடாக தெரியவந்துள்ளது.
ஜவுளி ஏற்றுமதி 47.8 வீதம் அதிகரித்து 156.6 மில்லியன் டொலராகவும், ஆடை ஏற்றுமதி 30.8 சதவீதம் அதிகரித்து 2.27 பில்லியன் டொலராகவும் உள்ளது.2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையிலிருந்து அனைத்து தொழில்துறை ஏற்றுமதிகளில் இந்த இரண்டு பிரிவுகளும் 56.43 சதவிகிதமாக இருந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து மே இறுதி வரை, இலங்கை குறைந்த அளவு கொவிட் -19 நோய்த் தொற்றுகளைப் பராமரிக்க முடிந்ததனால் பெரிய கொவிட் பேரழிவுகளுடன் போராடிய அண்டை ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி நாடுகள் மீது போட்டி போடுவதற்கு உதவியது.
ஆனால் ஆண்டின் இரண்டாம் பாதி முன்னைய நிலைமை போன்று இருக்க வாய்ப்பில்லை.ஜூன் மாதத்திலிருந்து,இலங்கையில் நோய்த் தொற்று உச்சத்தை எட்டி வருகிறது.