July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி நீர்கொழும்பில் மூவின மக்களும் போராட்டம்

நீர்கொழும்பில் வாழும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு எதிராக ஒரு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இலங்கை கத்தோலிக்க திருச்சபை அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கவும், தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் உள்ள அனைத்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பணியிடங்கள், அலுவலகங்கள் மற்றும் கத்தோலிக்கர்களின் வாகனங்களில் ஆகஸ்ட் 21 ஆம் திகதி கருப்புக் கொடியை ஏற்றி, எதிர்ப்பை வெளியிடுமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.,

தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற ஆட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து மத மக்களும் கைகோர்க்க வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.