
தெற்காசிய பிராந்திய நாடுகளிடையே தினசரி கொவிட் இறப்பு விகிதத்திற்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக வேர்ள்ட் மீட்டர் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நாளொன்றில் பதிவாகும் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கையை ஒரு மில்லியன் மக்கள் தொகை அடிப்படையில் ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தெற்காசிய பிராந்திய நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது.
இலங்கையில் தினசரி கொவிட் இறப்பு விகிதம் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 9 ஆக இருப்பதே இதற்கு காரணம்.
இந்த பட்டியலில் வங்காளதேசம், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன.
அத்தோடு மாலைதீவில் கடந்த 19 நாட்களில் கொவிட் மரணம் பதிவாகவில்லை.
கொவிட் மாறுபாடு தொடங்கியதில் இருந்து பூட்டானில் மூன்று மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
முன்னதாக, இந்த பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் இருந்தது.ஆனால் கடந்த 10 நாட்களில் இலங்கையில் பதிவான தினசரி இறப்புகளின் அதிகரிப்புடன், அது முதலிடத்தை பிடித்துள்ளது.