July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொது மக்களின் பங்குபற்றுதலின்றி கண்டி எசல பெரஹராவை தொடர்ந்தும் நடத்த முடிவு!

இலங்கையில் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட உள்ள நிலையில், கண்டி எசல பெரஹரா  திட்டமிட்டப்படி தொடர்ந்து இடம்பெறும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிகழ்வுகளுக்கு பொது மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று இரவு  மணி முதல் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து கண்டி பெரஹரா ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.

கண்டி எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா ஆகஸ்ட் 13 அன்று வீதி உலா வந்தது.

இதையடுத்து ஆகஸ்ட் 18  ம் திகதி தொடங்கிய ரந்தோலி பெரஹரா 22 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் இடம்பெறுகின்றது.

இறுதி நிகழ்வாக ஆகஸ்ட் 23 ஆம் திகதி ‘நீர் வெட்டு விழா இடம்பெற்று பெரஹெரா நிறைவடையவுள்ளது.